7 முறை எம்.பியாக இருந்தவர் மும்பை ஓட்டலில் தற்கொலை
7 முறை எம்.பியாக இருந்தவர் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார்.
தாத்ரா நாகர் ஹவேலி தொகுதியில் இருந்து மக்களவைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் தெல்கர்,மும்பையின் சீ கிரீன் ஓட்டல் அறை ஒன்றில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், அங்கு ஒரு கடிதமும் கிடைத்ததாக கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் மோகன் தெல்கர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளதாக கூறிய போலீசார், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மோகன் தெல்கர் காங்கிரசில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments