மகாராஷ்ட்ராவில் 3 மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிப்பு - கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை

0 2453
மகாராஷ்ட்ராவில் 3 மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிப்பு - கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை

கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 3 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 6,971 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அமராவதி, அகோலா, யவத்மா ஆகிய 3 மாவட்டங்களில் நோய் தொற்று மிக அதிகரித்து வருவதால், அந்த 3 மாவட்டங்களிலும் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல புனே, நாசிக் ஆகிய ஊர்களில் இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments