அடுத்த மூன்று ஆண்டுகளில் 35000 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுத தளவாட ஏற்றுமதி-அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவிப்பு

0 1351
அடுத்த மூன்று ஆண்டுகளில் 35000 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுத தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 35000 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுத தளவாட ஏற்றுமதியை அதிகரிக்க பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர் இதனை கூறினார். கடந்த 6 ஆண்டுகளில் தொழில் துறையில் சீர்திருத்தங்களை அரசு செய்துள்ளதாகவும், பாதுகாப்பு துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விற்றுமுதலை கொண்டு இருக்கும் அளவுக்கு பாதுகாப்புத்துறை சார்ந்த தொழிலை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments