கூலி வேலைக்காக கொத்தடிமைகளாக வெளிமாநிலத்திற்கு அழைத்து செல்லப்பட இருந்த 6 சிறுவர்கள் மீட்பு : அழைத்து சென்ற பெண் கைது

0 1041
கூலி வேலைக்காக கொத்தடிமைகளாக வெளிமாநிலத்திற்கு அழைத்து செல்லப்பட இருந்த 6 சிறுவர்கள் மீட்பு : அழைத்து சென்ற பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் இருந்து கூலி வேலை செய்ய கொத்தடிமைகளாக வெளி மாநிலத்திற்கு அழைத்து செல்லப்பட இருந்த 6 சிறுவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

இங்குள்ள நீப்பத்துறை, ராமாபுரம், மேல்ராவந்தவாடி ஆகிய 3 கிராமங்களின் இருளர் காலனியின் 13 வயது சிறுவர்கள் குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மீட்கப்பட்ட சிறுவர்களை, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினர், இவர்களை வெளி மாநிலத்திற்கு அனுப்ப முயன்றதாக பெண் ஒருவரை கைது செய்தனர்.

குடும்ப வறுமை காரணமாக சிறுவர்களை, அவர்களது பெற்றோர், பணம் வாங்கிக் கொண்டு, கொத்தடிமைகளாக அனுப்ப முயன்றதாக செங்கம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments