4 மாநிலங்களில் பெட்ரோல்,டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைப்பு

பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதைச் சற்றுக் குறைக்கும் நடவடிக்கையாக மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, ராஜஸ்தான் மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்துள்ளன.
மேற்கு வங்க அரசு பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்துள்ளது. ராஜஸ்தான் அரசு கடந்த மாதமே வரியை 2 விழுக்காடு குறைத்துவிட்டது. அசாம் மாநில அரசு கொரோனா சூழலில் 5 ரூபாய் அளவுக்குக் கூடுதலாக விதித்த வரியை இப்போது திரும்பப் பெற்றுள்ளது.
மேகாலய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் 40 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் பத்துக் காசுகளும் குறைத்துள்ளது.
Comments