பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்து அறிமுக நிகழ்ச்சி : மத்திய சுகாதார அமைச்சர் பங்கேற்றது குறித்து ஐஎம்ஏ விமர்சனம்

0 1114
பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்து அறிமுக நிகழ்ச்சி : மத்திய சுகாதார அமைச்சர் பங்கேற்றது குறித்து ஐஎம்ஏ விமர்சனம்

தஞ்சலி நிறுவனத்தின் கெரோனில் மருந்து அறிமுக நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பங்கேற்றது குறித்து நாட்டு மக்களுக்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.

கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என்று கூறி கடந்த வெள்ளிக்கிழமை பதஞ்சலி நிறுவனம் கொரோனில் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது.

அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன் மற்றும் நிதின்கட்காரி பங்கேற்றிருந்தனர்.

எந்த மருத்துவ ஆராய்ச்சிக்கும் உட்படுத்தப்படாத, தவறான பிரச்சாரம் செய்யும் மருந்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் ஒரு டாக்டராக இருந்து கொண்டு சுகாதாரத்துறை அமைச்சர் எவ்வாறு பங்கேற்கலாம் என்று இந்திய மருத்துவ சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments