ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு...பல அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்..!

0 2865
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நான்கு ரோடு பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நான்கு ரோடு பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

இதன் காரணமாக பாலக்கோடு வழியாக கிருஷ்ணகிரி செல்லும் குடிதண்ணீர் வீணாகியது. சுமார் ஒரு மணி நேரமாக தண்ணீர் வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.

இது தொடர்பாக குடிநீர் திட்ட அலுவலர்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்த போதிலும், அதிகாரிகள் உடனடியாக அப்பகுதிக்கு செல்லாததால் தண்ணீர் வீணாகியபடி இருந்தது. அதிக அளவிலான தண்ணீர் பீறிட்டு வெளியேறியதை பலர் வியப்புடன் பார்த்ததுடன் செல்போனிலும் படம் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments