அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற நபர் மீது மோதிய பைக்-பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

0 17148

தெலங்கானா மாநிலம் மேய்ச்சல் மாவட்டத்தில் வாகனம் வருவதை பார்க்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சின்தல் பகுதியில் சாலையோர பழக்கடை நடத்தி வரும் ராஜா என்பவர் எதிரிலுள்ள கடைக்கு சென்று சில்லறை மாற்றிவிட்டு வரும்பொழுது, வாகனம் வருவதை பார்க்காமல் பணத்தை எண்ணியவாறு சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியதில், வாகனத்தில் வந்த நபர் எதிர்திசையில் தூக்கி வீசப்பட்டார்.

விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும், மேய்ச்சல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments