நிலக்கரித் திருட்டு வழக்கில் எம்.பி அபிசேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ நோட்டீஸ்

நிலக்கரித் திருட்டு வழக்கில் விசாரணைக்காகத் தனது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நாளை வரலாம் என அபிசேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பதிலளித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டியெடுத்துக் கடத்தியதாக அனுப் லாலா என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து தன்னைக் காப்பதற்காக முதலமைச்சரின் மருமகனான அபிசேக் பானர்ஜியின் மனைவி ருஜிராவிடம் அனுப் லாலா லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ருஜிராவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள அவர், எந்தக் காரணத்துக்காகத் தன்னை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது எனத் தனக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காகத் தன் வீட்டுக்கு வரலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Comments