மந்திரவாதி அல்ல, சொல்வதை நிறைவேற்றும் செயல்வாதி: விமர்சனத்திற்கு முதலமைச்சர் பதில்

0 2732
மந்திரவாதி அல்ல, சொல்வதை நிறைவேற்றும் செயல்வாதி: விமர்சனத்திற்கு முதலமைச்சர் பதில்

தேர்தல் போருக்கு அதிமுகவினர் தயாராகுமாறு அழைப்பு விடுத்துள்ள முதலமைச்சர், மக்களுக்கு உதவி செய்ய ஓடோடி வரும் பழனிசாமியாக இருப்பேன் என உறுதியளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லியம்பாளையத்தில், அதிமுக மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று உரையாற்றினார். பெருந்திரளாகக் கூடியிருக்கும் மகளிர் அணி முயற்சி செய்தால், சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படும் என்றார். எனவே தேர்தல் போருக்கு அனைவரும் தயாராகும்படி கேட்டுக்கொண்டார்.

ஆத்தூர் தாலுகாவில் உள்ள தலைவாசல் இனி தனி தாலுகாவாக செயல்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதலமைச்சர் திட்டங்களை அறிவித்தபடி உள்ளார், அவர் என்ன மந்திரவாதியா? என மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தான் மந்திரவாதி இல்லை, சொல்வதை செய்யும் செயல்வாதி என்றார்.

10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், முதலமைச்சர் பதவிக்கான கோரப்பசியில் மு.க. ஸ்டாலின் உள்ளதாக விமர்சித்த அவர், திமுகவின் தில்லுமுல்லுகளை முறியடித்து தேர்தல் வெற்றியை உறுதிசெய்யுமாறு, அதிமுகவினரை கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments