தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2100
தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மற்றும் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையை தினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் 24 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 12 செண்டி மீட்டர் மழையும், கடலூர் வானிலை மையத்தில் 11 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments