பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களுக்கு தினந்தோறும் சாட்டையடி - மு.க.ஸ்டாலின்

0 1968
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களுக்கு தினந்தோறும் சாட்டையடி - மு.க.ஸ்டாலின்

அசாம், கேரளாவில் பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் வரியை குறைத்ததுபோல, தமிழகத்தில் அதிமுக அரசு ஏன் வரியைக் குறைக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள டிஎண் பாளையத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வையும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க கோரி கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு, அதிமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தின் குறைகளை எடுத்து கூறும் குறும்படத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என்று கூறி வந்த மத்திய அரசு, தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவதாகக் குற்றம்சாட்டினார். அருந்ததியினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில்லை இட ஒதுக்கீடு பெற்று தந்தது திமுக அரசு தான் என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

டிஎண் பாளையத்தைத் தொடர்ந்து அந்தியூர் அருகே உள்ள பூனாட்சி ஸ்பேக் குச்சி கிழங்கு ஆலையின் கழிவுகள் வெளியேறும் பகுதியை ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள மூங்கில் புதர் காடுகள் வழியாக சித்தாறு ஓடையில் கலந்து பவானி ஆறு வரை செல்கிறது.

துர்நாற்றத்துடன் செல்லும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பதாகக் கூறும் அப்பகுதி மக்கள், கழிவுநீர் செல்லும் பாதையை பார்வையிட வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி அங்கு சென்று பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments