கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து ஒருசில நாட்களில் அறிவிப்பு வெளியாகும் -நிதி ஆயோக்

0 542
கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத்துவது குறித்த அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியாகும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத்துவது குறித்த அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியாகும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுச் சமாளிப்புக் குழுவின் தலைவரான வி.கே.பால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இதுவரை ஒருகோடியே 7 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒரு நாளில் பத்தாயிரம் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றால் அவற்றில் இரண்டாயிரம் முகாம்கள் தனியார் துறையினரால் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்தும் வகையில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத்த முடிவெடுத்துள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் வி.கே.பால் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments