புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ராஜினாமா

0 6258
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ராஜினாமா

தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை சபாநாயகர் ஏற்க மறுப்பதால், வெளியேறுவதாகக் கூறிய நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறிச்சென்றார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி அரசு படுதோல்வியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்வதாக நாராயணசாமி கடிதம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments