பெட்ரோல், டீசல் விலை உயர்வு : தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்பாட்டம்

0 1406
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை சைதாப்பேட்டையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் திமுக பொருளார் டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.
மத்திய, மாநில அரசை கண்டித்து தி.மு.க.வினர் முழக்கமிட்டனர்.

திருவள்ளூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டனர்.

திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர். 

இதே போன்று மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments