உளுந்தூர்பேட்டையில் திருப்பதி தேவஸ்தான கோவில்: முதலமைச்சர் முன்னிலையில் பூமி பூஜை

0 6941

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கர் பரப்பளவில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவதற்கான பூமிபூஜையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். முன்னதாக கோ பூஜை, சங்கு ஸ்தாபனம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

பூமி பூஜையை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்கு மண்டல ஐ.ஜி., சங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments