ஆப்கானிஸ்தான்: குண்டுவெடிப்பில் காயமடைந்த தாய், எழச் சொல்லி அழும் குழந்தைகள்

ஆப்கானில், குண்டுவெடிப்பில் சிக்கி மயக்கமுற்ற தாயை எழுந்திருக்கச் சொல்லி அருகில் நின்று படுகாயங்களுடன் குழந்தைகள் அழும் வீடியோ காண்போரை கண்கலங்கச் செய்கிறது.
ஆப்கானில், குண்டுவெடிப்பில் சிக்கி மயக்கமுற்ற தாயை எழுந்திருக்கச் சொல்லி அருகில் நின்று படுகாயங்களுடன் குழந்தைகள் அழும் வீடியோ காண்போரை கண்கலங்கச் செய்கிறது.
தலைநகர் காபூலில் பாதுகாப்பு படையினரை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில், பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பில் சிக்கி தாய் பலத்த காயமடைந்து மயக்கமடைந்ததை அறியாத குழந்தைகள், தாய் அருகே நின்று அழும் வீடியோ வெளியாகியுள்ளது.
தங்களது காயத்தையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் இருவரும் அம்மாவை எழுந்திருக்கச் சொல்லும் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments