ஒடிசாவில் திருமண விருந்தில் சாப்பிட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்: 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடம் எனத் தகவல்

ஒடிசாவில் திருமண விருந்தில் சாப்பிட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்: 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடம் எனத் தகவல்
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் திருமண விருந்தில் உணவு உட்கொண்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மாட்டியா கிராம மக்கள் பலருக்கு உணவருந்திய பின், வாந்தி, வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதார அதிகாரி கூறினார்.
Comments