காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினர்: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

0 1764

காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டு பிடித்த பாதுகாப்புப் படையினர் அதிலிருந்து ஏராளமான ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்றனர். அப்போது, வனப்பகுதியில் புதர்களுக்கு மத்தியில் பயங்கரவாதிகள் முறைகேடாக பயன்படுத்தி வந்த மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அங்கு பார்த்தபோது, ஏகே 56 ரக துப்பாக்கிகள், சீனத்தயாரிப்பு கைத்துப்பாகிகள், தொலைநோக்கி, கையெறி குண்டுகள் என ஏராளமான ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அவற்றைப் பறிமுதல் செய்து தீவிரவாதிகளைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments