பெங்களூர் விதான சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு - காவல் ஆணையர்

0 10971
பெங்களூர், விதான சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக காவல் ஆணையர் கமல்பந்த் அறிவித்துள்ளார்.

பெங்களூர், விதான சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக காவல் ஆணையர் கமல்பந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரசைவ லிங்காயத்தின் ஒரு பிரிவான பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களை 2 ஏ பிரிவில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி, வருகின்ற 4ம் தேதி வரை பெங்களூரு சுதந்திர பூங்காவில் தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் விதான சவுதாவை, முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி வரை விதான சவுதா அதனை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments