2 வாரங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்தால் மீண்டும் பொதுமுடக்கம், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

0 1042
அடுத்த 2 வாரங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்தால் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த 2 வாரங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்தால் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காணொளி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், கொரோனா 2வது அலை உருவாகியுள்ளதா என உறுதிபடுத்த 8 முதல் 15 நாட்கள் வரை ஆகும் எனத் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றுமாறு எச்சரித்த அவர், பொதுமுடக்கம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மாஸ்க் அணிவார்கள் என்றும், பொதுமுடக்கம் வேண்டும் என்பவர்கள் மாஸ்க் அணியமாட்டார்கள் எனக் கூறினார்.

அடுத்த 8 முதல் 15 நாட்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றால் பொது முடக்கம் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments