கொரோனா தொற்றை குணமடையச் செய்வதில் ஃபைசர் தடுப்பூசி பலனளிக்கிறது - இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

0 4871
கொரோனா தொற்றை குணமடையச் செய்வதில் ஃபைசர் தடுப்பூசி பலனளிக்கிறது - இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

கொரோனா தொற்றை குணமடையச் செய்வதில், அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசி 96 சதவீதம் பலனளிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலில் அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன் டெக்கும் இணைந்து தயாரித்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்நாட்டில் இதுவரை, சுமார் 28 லட்சம் பேருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீவிர கொரோனா தொற்றை குணமடையச் செய்வதில் 99 சதவீதம் அளவுக்கும், கொரோனா உயிரிழப்பை தடுப்பதில் 98 சதவீதம் அளவுக்கு பைசர் தடுப்பூசி பலனளிப்பதாக இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் அரசு சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு பைசர் தடுப்பூசியை வாங்கி சேகரித்து வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments