சென்னையில் ஸ்பிளண்டர் பைக்குகளை குறிவைத்து திருட்டு : ஸ்பிளண்டரை மட்டுமே குறிவைத்து திருடியது ஏன்? - பகீர் வாக்குமூலம்

0 30747
சென்னையில் ஸ்பிளண்டர் பைக்குகளை குறிவைத்து திருட்டு : ஸ்பிளண்டரை மட்டுமே குறிவைத்து திருடியது ஏன்? - பகீர் வாக்குமூலம்

சென்னையில் Splendor பைக்குகளை குறிவைத்து திருடிய வேலூர் கொள்ளையனை கைது செய்த போலீசார்,அவனிடமிருந்து 25 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

நெற்குன்றத்தைச் சேர்ந்த திலீப் என்பவரின் இருசக்கர வாகனம், கடந்த 2 மாதங்களுக்கு முன், காணாமல் போனது. இதைபோல கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி பகுதிகளிலும் வாகனங்கள் திருடுபோனது.

அந்தபகுதிகளிலுள்ள சிசிடிவிக்களை போலீசார் ஆராய்ந்தபோது, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளியான யுவராஜ், தனது கூட்டாளியுடன் சேர்ந்து கைவரிசையை காட்டியது தெரியவந்தது.

பின்னர் அவனை கைது செய்த போலீசார், 25 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

உடைத்து திருட எளிதாக இருந்ததால், Splendor ரக வாகனங்களை மட்டும் திருடியதாக, போலீசார் விசாரணையின்போது, பைக் திருடன் கூறியிருப்பதாக, சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments