மேற்கு வங்கம், அசாமில் பாஜக ஆட்சியமைக்கும் என நிர்வாகிகள் நம்பிக்கை -பாஜக துணைத் தலைவர் ரமண் சிங்

0 746
பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் பற்றி விவாதித்துள்ள நிலையில் மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் பாஜக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் பற்றி விவாதித்துள்ள நிலையில் மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் பாஜக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து உரையாற்றினார்.

அதன்பின் மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பற்றி நிர்வாகிகள் கலந்துரையாடினர். தற்சார்பு உற்பத்தி, புதிய வேளாண் சட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் ரமண் சிங், மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், அசாமில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments