புனேவில் கொரோனா பரவலை தொடர்ந்து 28ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, புனேவில் வரும் 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, புனேவில் வரும் 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு 11 மணிக்கு மேல் ஒட்டல் மற்றும் உணவகங்கள் செயல்பட தடைவிதித்துள்ள மாவட்ட நிர்வாகம், திருமண விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே நாக்பூர், அமராவதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க, இரவு நேரத்திலும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே விரைவில் வெளியிடுவார் என அமைச்சர் விஜய் வாதேத்திவர் தெரிவித்தார்.
Comments