இறப்பிலும் இணைப்பிரியா தம்பதி... கணவர் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் மனைவியும் இறந்த பரிதாபம்!

0 7014

ஈரோட்டில் கணவர் இறந்த செய்தி கேட்டதும் மனைவியும் இறந்த சம்பவம் ஓலப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள முள்ளம்பட்டி ஓலப்பாளயத்தை சேர்ந்தவர் மாணிக்கம் என்கிற பழனிச்சாமி(75). தனது மனைவி முத்தாயம்மாள் விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இதனால் சொந்த ஊரான ஓலப்பாளையத்தில் கணவன் மனைவி மட்டுமே வசித்து வந்தார்கள். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் பழனிச்சாமி, கண்ணவேலம்பாளையத்திலுள்ள தன்னுடைய தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் மயங்கி விழுந்து அதே இடத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் யாரும் இல்லாததால் பழனிச்சாமி இறந்து கிடந்தது தெரியவில்லை. மாலை 6 மணி அளவில் அந்த வழியாக சென்ற சிலர் பழனிச்சாமி இறந்து கிடப்பதை பார்த்து அவரது பக்கத்து வீட்டுக்காரரான சுப்பிரமணியம் என்பவரிடம் தகவல் கொடுத்துள்ளனர். உடனே சுப்பிரமணியம் பழனிச்சாமியின் மனைவி முத்தாயம்மாளிடம் இதுபற்றி கூறியுள்ளார். கணவர் இறந்த செய்தியைக் கேட்டதும் மனைவி முத்தாயம்மாள் அதிர்ச்சியில் அவரும் மயங்கி விழுந்து இறந்தார்.

கணவர் இறந்த செய்தியை அறிந்த மனைவியும் மயங்கி விழுந்து இணைப்பிரியாமல் இறந்த சம்பவம் ஓலப்பாளையம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments