நிலக்கரி திருட்டு வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ சம்மன்

0 1093
நிலக்கரி திருட்டு வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ சம்மன்

நிலக்கரி முறைகேடு வழக்கில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

ஈஸ்டர்ன் கோல்பீல்டு நிறுவனம் ஒப்பந்தத்தில் எடுத்துள்ள சுரங்கங்களில் இருந்து திருட்டுத்தனமாக நிலக்கரி வெட்டி எடுத்த விவகாரத்தில், கடந்த நவம்பரில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் மேற்கு வங்கத்தில் 13 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அபிஷேக் பானர்ஜியின் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரது மனைவி ருஜிராவிடம் சம்மன் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments