லூசியானா துப்பாக்கி கடையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் பலி

0 773
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள துப்பாக்கி விற்பனை செய்யப்படும் கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டுக்கொன்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் வாடிக்கையாளர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments