கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உள்நாட்டுக்கு முன்னுரிமை : அரசின் வழிகாட்டலை தொடர்ந்து சீரம் இந்தியா அறிவிப்பு

0 758
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உள்நாட்டுக்கு முன்னுரிமை : அரசின் வழிகாட்டலை தொடர்ந்து சீரம் இந்தியா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உள்நாட்டுக்கு முன்னுரிமை அளிக்குமாறு தங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இந்தியா தயாரிக்கிறது.

இந்திய மக்களுக்கு இந்த தடுப்பூசி போடுப்படும் அதே வேளையில், பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு இப்படி ஒரு வழிகாட்டலை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அடார் பூனாவாலா, பிற நாடுகள் தடுப்பூசிக்காக சிறிது பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் தேவை மிகவும் அதிகமாக இருப்பதால் ஏற்றுமதி செய்வதில் சிறிது சுணக்கம் ஏற்படும் என பிற நாட்டு அரசுகளுக்கு டுவிட்டரில் அவர் தகவல் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments