காவலரை அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்ட ரவுடி காவல்துறையினருடனான மோதலில் உயிரிழந்ததாகத் தகவல்

காவலரை அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்ட ரவுடி காவல்துறையினருடனான மோதலில் உயிரிழந்ததாகத் தகவல்
உத்தரப்பிரதேசத்தின் காஸ்கஞ்சில் காவலரை அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்ட ரவுடி மொட்டி சிங், காவல்துறையினருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
சாராய வணிகர் மற்றும் ரவுடியான மொட்டி சிங்கை ஒரு வழக்கு விசாரணைக்காக சித்புரா காவல் உதவி ஆணையரும், காவலரும் பிடிக்கச் சென்றனர்.
மொட்டி சிங்கும் அவன் ஆட்களும் உதவி ஆய்வாளரையும், காவலரையும் கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் காவலர் உயிரிழந்தார். உதவி ஆய்வாளர் படுகாயமடைந்தார்.
இந்த வழக்கில் மொட்டி சிங்கைத் தேடி வந்த நிலையில் இன்று காலையில் நிகழ்ந்த மோதலில் அவனைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
Comments