கொடுத்த எந்த வாக்குறுதியையும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பள்ளக்காட்டுப்புதூர் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பின்னர் பேசுகையில் ஒரு காலத்தில் டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் மாநகரம் தற்போது டல் சிட்டியாக மாறிவிட்டதாக விமர்சித்தார். மத்திய, மாநில அரசுகளின் தவறான திட்டங்களால் சிறு, குறு தொழில்கள் முடங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறு குறு நிறுவன தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
கொடுத்த எந்த வாக்குறுதியையும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் ஸ்டாலின் உறுதியளித்தார்.
Comments