பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருவதையொட்டி சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருவதையொட்டி சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலம் வருவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலம் அருகே உள்ள கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று மாலை பாஜக மாநில இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ளும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து குரங்குசாவடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் ராஜ்நாத் சிங், மாலை 4 மணி அளவில் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.
இதனையொட்டி விமான நிலையம் மற்றும் கெஜல்நாயக்கன்பட்டியில் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்யப்படுகிறது. மேலும் மாநாடு நடக்கும் பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Comments