ஐ.நா. அமைதிப்படைக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா... நன்றி தெரிவித்த ஐ.நா பொதுச் செயலர்

0 1554
ஐ.நா. அமைதிப்படைக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா... நன்றி தெரிவித்த ஐ.நா பொதுச் செயலர்

ஐ.நா. அமைதிப்படையினருக்கு இரண்டு லட்சம் டோசுகள் கொரோனா தடுப்பூசியை வழங்கியதற்காக ஐ.நா பொதுச் செயலர் அந்தோணியோ குட்டரெஸ், இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை உலக மக்கள் அனைவருக்கும் வழங்க முன்வந்துள்ளதற்கும் இந்தியாவுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த வார நிலவரப்படி இந்தியா 2 கோடியே 30 லட்சம் டோஸ் தடுப்பூசியை சர்வதேச நாடுகளுக்கு வழங்கி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments