ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 333 கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வினாடிக்கு 512 கனஅடி வீதம் நீர் வந்துகொண்டிருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 6 ஆயிரத்து 333 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.87 அடியாகவும், நீர் இருப்பு 25.6 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
Comments