கடலூர், புதுச்சேரியில் கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் கடலூர், விழுப்புரம், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர், புதுவையில் 19 செண்ட்டி மீட்டர் மழையும், திருநெல்வேலி மணிமுத்தாறு மற்றும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் தலா 10 செண்ட்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
Comments