குஜராத்தில் 6 மாநகராட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது

0 2724
குஜராத்தில் 6 மாநகராட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது

குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.

அகமதாபாத்,சூரத், வடோதரா, ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பவநகர் மாநகராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. இந்த 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 575 வார்டுகள் உள்ளன. பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை சேர்ந்த மொத்தம் 2276 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 43 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் ஒரு கோடியே 14 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவே குஜராத் வந்து சேர்ந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments