கோவை அருகே விறுவிறு ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப்பாய்ந்த காளைகள்!

கோவை அருகே விறுவிறு ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப்பாய்ந்த காளைகள்!
கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்ற காட்சிகள் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இந்த போட்டியில் 1000 காளைகளும், 750 மாடு பிடி வீரர்களும் பல சுற்றுகளாக பங்கேற்கின்றனர்.
அதிக காளைகளை அடக்கி போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் வந்து ஆர்வமுடன் ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து வருகின்றனர்.
Comments