பெருந்துறை மருத்துவக் கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரி கட்டணமே வசூலிக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி!

0 3806

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணமே தமிழக அரசு வசூலிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததையடுத்து மாணவர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தனியார் மருத்துவ கல்லூரியில் வசூலிப்பது போல் 4 லட்சம் ரூபாய் வரையில் அங்கு கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நேற்று அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் 13ஆயிரத்து 610 ரூபாய் கட்டணமே இங்கு வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments