நாடு முழுவதும் இதுவரை 1.07 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதார அமைச்சகம்

நாடு முழுவதும் இதுவரை 1.07 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதார அமைச்சகம்
இதுவரை ஒருகோடியே ஏழு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 5 மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று முழுவீச்சில் பரவிக் கொண்டிருக்கிறது. கேரளா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாதிப்புகள் குறைந்த நிலையில் மீண்டும் இம்மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments