ம.பி. பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்து: 54 பேரின் உடல்கள் மீட்பு

ம.பி. பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்து: 54 பேரின் உடல்கள் மீட்பு
மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில், பலியான மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதால் உயிரிழப்பு 54 ஆக உயர்நதுள்ளது.
பட்னா கிராமம் அருகே கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி சத்னாவில் இருந்து தனியார் பேருந்து ஒன்று வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 61 பேருடன் கால்வாயில் கவிழ்ந்தது. 5 நாட்களாக மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில் மொத்தம் 54 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மீட்பு பணிகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களில் 7 பேர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Comments