விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து.... திஷா ரவிக்கு ஜாமின் வழங்க போலீசார் எதிர்ப்பு

0 1182
விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து.... திஷா ரவிக்கு ஜாமின் வழங்க போலீசார் எதிர்ப்பு

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள 22 வயது இளம் பெண் திஷா ரவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது.

இந்தியாவை குறித்து அவதூறு செய்வதும் அமைதியின்மையை ஏற்படுத்தவும் திஷா ரவி திட்டமிட்டதாக போலீசார் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. காலிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்ட திஷா ரவி தமது தடத்தை அழித்ததாகவும் ஆதாரங்களை நீக்கியதாகவும் போலீசார் குற்றம் சாட்டினர்.

இதனிடையே திஷா ரவிக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் பேச்சுரிமையும் கருத்து சுதந்திரமும் ஜனநாயகத்தின் அடிப்படை என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments