அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விபத்து: இரு விமானிகள் உயிரிழப்பு

அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விபத்து: இரு விமானிகள் உயிரிழப்பு
அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
14வது படைப்பிரிவைச் சேர்ந்த T-38 ரக விமானத்தில் விமானிகள் நேற்று மாலை பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். மிசிசிப்பியில் உள்ள கொலம்பஸ் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் புளோரிடாவின் டல்லாஹஸ்ஸிக்கு செல்வதாக இருந்தது.
இந்நிலையில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் விபரங்களை விமானப்படை வெளியிடவில்லை.
Comments