இந்தியாவின் சார்பாக மாலத்தீவுக்கு 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்கினார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவின் சார்பாக மாலத்தீவுக்கு 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்கினார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு சுகாதார அமைச்சர் அகமது நசீமுடன் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து ஒரு லட்சம் கோவிட் 19 தடுப்பூசிகளை இந்திய மக்களின் சார்பாக பரிசாக வழங்கினார்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாஹித் உள்ளிட்டோருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-மாலத்தீவு இடையே நீண்ட காலமாக ஆழமான நட்புறவு நீடிப்பதாகவும் கொரோனா தொற்றை இருநாடுகளும் இணைந்து முறியடிக்கும் என்றும் ஜெய்சங்கர் தமது டிவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
Comments