பாஜக தேசிய செயலாளர்கள், நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

பாஜக தேசிய செயலாளர்கள், நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
பாஜக தேசிய பொதுச் செயலாளர்களுடன் இன்று பிரதமர் மோடி டெல்லியில் கலந்துரையாட உள்ளார்.
முன்னதாக பாஜக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று கலந்துரையாடினார். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, போட்டியிடும் இடங்கள், பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் இன்றுடன் 88 வது நாளாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் சூழலில் இது தொடர்பாகவும் பிரதமர் கட்சியினரின் கருத்தை அறிய உள்ளார்.
Comments