விமான நிலைய ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம் மின்கம்பத்தில் மோதி விபத்து

ஆந்திராவில் ஓடுபாதையில் இருந்து விலகிய ஏர் இந்தியா விமானத்தின் இறக்கைகளில் ஒன்று மின்கம்பத்தில் மோதியது.
ஆந்திராவில் ஓடுபாதையில் இருந்து விலகிய ஏர் இந்தியா விமானத்தின் இறக்கைகளில் ஒன்று மின்கம்பத்தில் மோதியது.
விஜயவாடாவில் உள்ள விமான நிலையத்திற்கு அரபு நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் 64 பயணிகளுடன் வந்தது. தரையிறங்கும் போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு லேசாக விலகியது.
அப்போது விமானத்தின் வலதுபக்க இறக்கை, பாதையின் ஓரமாக இருந்த மின்கம்பத்தில் மோதி லேசாக சேதமடைந்தது. இதில் மின் கம்பம் கீழே சாய்ந்த நிலையில், விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் 64 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments