பதில் சம்பவம் தொடரும் சர்ச்சையில் சிக்கிய ரவுடியின் இறுதியஞ்சலி!

0 46801

வில்லியனூர் அருகே கொலை செய்யப்பட்ட ரௌடியின் இறந்த உடல் மீது பதில் சம்பவம் தொடரும் என போர்த்தப்பட்டு எடுக்கப்பட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவதையடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள மணவெளி காசிவிசுவநாதர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மகன் மதன்(20). பிரபல ரௌடியான மதன் மீது கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் கடந்த 17 ம் தேதி இரவு ரெளடி மதன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து ஆரியபாளையம் வந்துகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் மதனை சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த நிலையில் வியாழன் அன்று மதனின் உடல் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இறுதி ஊர்வலம் நடைபெற்றது.  அப்போது ரௌடியின் இறந்த உடல் மீது "பதில் சம்பவம் தொடரும்" என எழுதப்பட்டு போர்த்தப்பட்டுள்ளது. இந்த காட்சி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சமூக வலைதளங்களில்  பகிரப்பட்டதையடுத்து வைரலாகி வருகின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் பிரச்சனையை தூண்டும் வகையில் போர்வையில் எழுதப்பட்டுள்ள வாசகம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments