இந்தியா- அமெரிக்கா ராணுவத்தினரின் போர் பயிற்சி தீவிரம்..!

இந்தியா- அமெரிக்கா ராணுவத்தினரின் போர் பயிற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா- அமெரிக்கா ராணுவத்தினரின் போர் பயிற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் படைத்தளத்தில் இரு நாட்டு ராணுவத்தினர் இணைந்து யுத் அபியாஸ் என்ற பெயரில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி எதிரிகளை எதிர்கொள்வது, பாலைவன பரப்பில் போர் புரிவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக பயிற்சி நடைபெறுவதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
15 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது நவீன போர் ஆயுதங்களை கொண்டும் இரு நாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
Comments