காதலர் தினத்தன்று முகக்கவசம், தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் விவேக் ஓபராய் மீது வழக்குப்பதிவு

காதலர் தினத்தன்று முகக் கவசம், தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் விவேக் ஓபராய் மீது வழக்குப்பதிவு
காதலர் தினத்தன்று முக கவசம், தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது தொடர்பாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மீது மும்பை ஜூஹூ காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகராக உள்ள விவேக் ஓபராய், தமிழில் நடிகர் அஜீத்துடன் இணைந்து விவேகம் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனது மனைவியுடன், காதலர் தினத்தன்று இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சிகளை,இணையத்தில் அவர் பகிர்ந்த நிலையில், அதன் பேரில், இந்த நடவடிக்கையை எடுத்துள்ள மும்பை போலீசார், தலைகவசம், முக கவசம் அணியாமல் சென்றதற்காக 500 ரூபாய் அபராதத்தையும் விதித்துள்ளனர்.
இதனிடையே, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள விவேக் ஓபராய்,தவறை உணர்த்திய மும்பை போலீசாருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
Comments