”Sorry for the inconvenience" கையை விரித்த ஏடிஎம்... கடுப்பான திருடன்!

0 6603

கன்னியாகுமரி மாவட்டத்தில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்து தோல்வியடைந்த விரக்தியில் வெளியே செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரை கிராம பகுதியான சின்னத்துறை சந்திப்பு பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு கீழ் ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்குள் கடந்த புதன் கிழமை இரவு புகுந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்று அதனை சேதப்படுத்தி சென்றுள்ளார்.

மறுநாள் காலை வழக்கம் போல் வங்கிக்கு வந்த மேலாளர் நிஷா ஏடிஎம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத்தொடர்ந்து வங்கியினுள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து இயந்திரத்தை உடைத்தார். பணத்தை திருட எவ்வளவோ முயற்சி செய்தும் பணம் ஏதும் கிடைக்காததால் ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை காலால் உதைத்து விட்டு ஆத்திரத்தில் வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதனை தொடர்ந்து வங்கி மேலாளர் நிஷா நித்திரவிளை காவல்துறையினரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நித்திரவிளை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தி பணத்தை திருட முயன்று விரக்தியில் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments