நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு உள்ளிட்ட 134 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர்

0 3559
நடிகர் சிவகார்த்திக்கேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களுக்கு, தமிழ்நாடு அரசின், கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

டிகர் சிவகார்த்திக்கேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களுக்கு, தமிழ்நாடு அரசின், கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விருதுகளை வழங்கினார்.

நடிகர் ராமராஜன், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, பாடகி சுஜாதா, விசுவல் எடிட்டர் ஆண்டனி, நகைச்சுவை நடிகை மதுமிதா, இசையமைப்பாளர் இமான், திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை சங்கீதா,நடிகர் ரவி மரியா, சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ், உள்ளிட்டோருக்கு, கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

ஜெ.ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகள், நடிகைகள் சரோஜா தேவி, செளகார் ஜானகி, பழம்பெரும் பாடகி பி.சுசிலா உள்ளிட்டோருக்கும், பாரதி விருது சுகி சிவத்திற்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வாணி ஜெயராமுக்கும், ஒரு லட்ச ரூபாய் காசோலையுடன் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments